பாப் உலக மகாராஜாவாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸன் மாரடைப்பு காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். அவருக்கு வயது 50.
மாரடைப்பு ஏற்பட்டது அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெல் ஏர் வீட்டில் வாடகைக்கு (1 லட்சம் டாலர் வாடகை) தங்கியிருந்த ஜாக்ஸன் அடுத்த இசை நிகழ்ச்சி க்கான பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள யுசிஎல்ஏ மருத்துவமனைக்கு, அவர் வீட்டில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அந்த மருத்துவமனையை மைக்கேல் ஜாக்ஸன் அணுகும்போது அவர் தனது சுவாசம் விட்டிருந்தார்.
ஜாக்ஸன் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் ஆறு நிமிடப் பயணம்தான். அந்த குறுகிய காலத்திற்குள் ஜாக்ஸனின் உயிர் அவரை விட்டு பிரிந்துவிட்டது. அவருடைய மரணத்தை அறிந்த தந்தை ஜோ ஜாக்ஸன் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடக்கிறார். அவருடைய தாயார் மைக்கேல் வீட்டுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்.
மைக்கேல் ஜாக்ஸனின் உடல் தற்போது மருத்துவமனையில் தான் உள்ளது. விரைவில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்படும் எனத் தெரிகிறது.
மைக்கேல் ஜாக்ஸனின் மரணத்தை அறிந்த அவருடைய ரசிகர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
மறைந்த மைக்கேல் ஜாக்ஸனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன், பேரிஸ் மைக்கேல் கேதரீன் ஜாக்ஸன் மற்றும் பிரின்ஸ் பிளான்கட் மைக்கேல் ஜாக்ஸன் 2 – என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மைக்கேல் ஜாக்ஸன் என்ற இசைப்புயல் 11 வயதில் தொடங்கி, பல்வேறு திசையில் பயணித்து 50 ஆவது வயதில் அடங்கிவிட்டது. உலக மக்கள் மனதில்அவர் பதிந்துபோய் இருக்கிறார்.
Leave a Reply