புத்தர் மறுஅவதாரம் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
நேபாள நாட்டுக் காட்டுக்குள், அடர்த்தியான பகுதி ஒன்றில் கடந்த ஓராண்டாக தவம் புரிந்துவரும் 17 வயதான ராம் பகதூர் பம்ஜான் என்ற வாலிபரைத்தான் நேபாள பிக்குகள் புத்தராக கருதுகிறார்கள். கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிதாகத் தெரியும் இந்த வாலிப சாமியாரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். ஆசிர்வாதம் பெற்று திரும்புகிறார்கள்.
புத்தரின் மறு அவதாரமாகக்கருதப்படும் ராம் பகதூர் பம்ஜான் 2005ஆம் ஆண்டுவாக்கிலேயே மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர்தான். அவர் மீது பட்ட மீடியா வெளிச்சம் இன்னும் நிறைய மக்களிடம் அவரைக் கொண்டுபோய் சேர்த்தது. சுமார் 10 மாதம் வரையில் தண்ணீரோ உணவோ இன்றி வாழும் அவருடைய தவசக்தியும் அவரை புத்தரின் மறுஅவதாரமாக மக்களை நம்ப வைக்கிறது.
கி.மு. 560ல் பிறந்த சித்தார்த்த கெளதம புத்தரின் மறுஅவதாரம் இவர்தானா என்ற என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்த இளம் சாமியாரின் போதனைகளும அமைதி மற்றும் நிர்வாணத்தை பற்றியே இருக்கின்றன. இவரும் . ஆசையை அறவே அறு என்கிறார். உடலைத் தழுவும் வெள்ளை வஸ்திரமும், கழுத்தைத் தாண்டி புரளும் கருங்கேசமும், ராம்பகதூரின் முகத்தில் தெரியும் சாந்தமும் மனிதனைக் காட்டிலும் சற்றே உயரத்தில் வைத்துத்தான் அவரைப் பார்க்கச் சொல்கின்றன.
இவரைக் குறித்த சந்தேகங்களுக்கும் பஞ்சமில்லை. விரதத்தின்போது ஆப்பிள் சாப்பி்ட்டது. தியானம் செய்யும் பாவனையில் தூங்கியது. பக்தர்களிடமிருந்து பெற்ற லட்சக்கணக்கான பணம் மறைந்த மாயம் என ஏகப்பட்ட சந்தேகங்கள் சுற்றி வருகின்றன.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை சந்தித்து, ஆசி கூறவிருக்கிறார் இந்த இளம்சாமியார். கடந்த முறை அவர் வெளிவந்தபோது காட்டுக்குள்ளே திருவிழா போல 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி இவரை தரிசித்தது, ஆசிர்வாதம் பெற்றனர்.
புத்தரோ சித்தரோ போலி சாமியாராக நாளை சந்திச் சிரிக்காமல் போனால் சந்தோஷம்
Leave a Reply