புலிகளைத் தோற்கடித்ததற்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி வழங்கிய விருந்துபசாரம்

posted in: மற்றவை | 0

pakistan_army_chief_kayaniஇலங்கையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டமைக்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானி இராப்போசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இவ்விருந்துபசாரத்தில் பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் விமானப்படைத் தளபதியுமான ஏயார் வைஷ் மார்ஷல் ஜயலத் வீரக்கொடியும் அவரது பாரியாரும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

இவ்விருந்துபசார நிகழ்வில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கயானி கருத்துத் தெரிவிக்கையில்;

இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட பயங்கரவாதத்தை இராணுவத்தினர் தோற்கடித்ததையிட்டு பாகிஸ்தான் மக்களும் இராணுவத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த பலவருடங்களாக இலங்கை பாகிஸ்தானின் மிகவும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றியீட்டியதையிட்டு பாகிஸ்தான் பெருமையடைகிறது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது இருந்துவரும் நட்புறவானது எதிர்வரும் காலங்களில் மிகவும் வலுவடையும் என்பதில் பாகிஸ்தானுக்கு நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கு உரையாற்றிய பாகிஸ்தான் தூதுவர் ஜயலத் வீரக்கொடி தெரிவிக்கையில்;

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியில் வலுவான உறவு இருந்து வருகின்றது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்தினர் வெற்றியடைவதற்கு பாகிஸ்தானின் பங்கும் உண்டெனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *