புலிகள் சர்வதேச நெட்வொர்க்கை தகர்க்க இலங்கை அதிரடி : அமெரிக்கா ஒத்துழைப்பு

posted in: மற்றவை | 0

tblfpnnews_2049982548கொழும்பு: இலங்கையில், விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்டிய இலங் கை அரசு, சர்வதேச அளவில் புலிகளுக்கு பணம், ஆயுதங்கள் வந்த “நெட்வொர்க்’கை தகர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறது.

முப்பதாண்டாக இலங்கையில் தனி நாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்த விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் அடியோடு ஒடுக்கி விட்டது. பிரபாகரன் உட்பட முக்கிய புலி தலைவர்களை சுட்டுக்கொன்று விட்டது. தமிழர் பகுதிகளில் அதிகாரங்களை பகிர்ந்தளித்து, அவர்களுக்கு சுயகவுரவத்துடன் வாழ மறுவாழ்வு செய்து தர வேண்டிய பணிகளை இலங்கை அரசு இனி கவனிக்க வேண்டும். அதற்காக, சர்வதேச அளவில் நிதி உதவியையும் எதிர்பார்க்கிறது. ஆறு மாதங்களுக்குள் எல்லா தமிழர்களும் முகாமில் இருந்து மீண்டும் அவர்கள் இருப்பிடத்துக்கு சென்று விடலாம் என்று இந்தியாவிடம் அதிபர் ராஜபக்ஷே உறுதி கூறியுள்ளார். மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் புலிகள் தலைதூக்காமல் இருக்க விழிப்புடன் உள்ளது. அதற்கான, அதிரடி நடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுத்து வருகிறது. பிரபாகரன் உட்பட முக்கிய புலி தலைவர்கள் கொல்லப் பட்டதால், இதுவரை, உணவுப்பொருட்கள் உட்பட சட்டவிரோதமாக வந்து கொண்டிருந்த “சப்ளை’கள் முற்றிலும் ஒடுக்கப்பட்டன. தமிழர் பகுதிகளுக்கு இனி, இலங்கையின் மற்ற பகுதிகளில் இருந்தே பொருட்கள் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி கூறியுள்ளது.

புலிகள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்பது, சர்வதேச அளவில் அவர்கள் வைத்திருந்த “நெட்வொர்க்’கை தகர்ப்பது தான். புலிகளுக்கு பணம், ஆயுதங்கள் வந்து கொண்டிருந்தது, இந்த “நெட்வொர்க்’ மூலம் தான். புலிகளுக்கு இந்த “நெட்வொர்க்’கில் உள்ளவர்கள், நேரடியாக எந்த உதவியையும், வினியோகத்தையும் புலிகளுக்கு செய்யவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இவர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு பெயர்களில் அமைப்புகளை நிறுவி ஏகப்பட்ட கோடிகளை வசூலித்து வந்துள்ளனர். “மீண்டும் இலங்கையில் தனி ஈழம் உருவாக போராடுவோம்; மக்களுக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்காக நன்கொடை செய்யுங்கள்’ என்று நன்கொடையை இப்போதும் வசூலித்தும் வருகின்றனர். கம்ப்யூட்டர் மூலமான இன்டர்நெட் வழி “நெட்வொர்க்’குகளை இலங்கை அரசு கண்டுபிடித்து விட்டது. புலிகளின் வசம் இருந்த பகுதிகளில், அவர்களின் பதுங்கு இடங்களில் பல முக்கிய சர்வதேச தொடர்பு தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகள் பணம் பெறும் “இன்டர்நெட்’ வழி தொடர்புகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. எந்த நாட்டில் உள்ள பிரபலங்களுக்கு புலிகள் எவ்வளவு பணம் தந்து வருகின்றனர், புலிகளுக்கு எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு பணம் கிடைத்து வருகிறது போன்ற விவரமும் சிக்கின. இவற்றை எல்லாம் சேகரித்த இலங்கை அரசு, புலிகளின் கம்ப்யூட்டர் “நெட்வொர்க்’கின் முகவரியை மாற்றி மேலும் தகவல்களை சேகரித்து வருகின்றன. எந்த நாட்டில் யார் பணம் வசூலிக்கின்றனர்; புலிகளுக்கு “நிழலாக’ இருந்து செயல்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.
இந்த தகவல்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் இலங் கை அரசு கோரியது. இதற்கு முதல் பலன் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ப்ரூக்லின் பகுதியில் கருணாகரன் கந்தசாமி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இன்டர்நெட் மூலம் பணம் வசூலித்து, புலிகளுக்கு உதவிகளை செய்து வந்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளது இலங்கை அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அதே சமயம், பிரிட்டன், பிரான்சில் உள்ள புலிகளுக்கு “நிழலாக’ இருந்த அமைப்புகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படி கோரியதற்கு போதுமான அளவில் அக்கறை காட்டப்படவில்லை என்று இலங்கை வருத்தம் தெரிவித்துள்ளது. “ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிலர் பெயர் மற்றும் அவர்கள் புலிகளுக்கு எந்த வகையில் உதவி வந்துள்ளனர் என்ற விவரத்தை அந்த நாடுகளுக்கு அளித் துள்ளோம். ஆனால், அவர்களை விசாரிக்கக் கூட இல்லை’ என்று இலங்கை அரசு அதிகாரிகள் கூறினர். இப்படி சர்வதேச “நெட் வொர்க்’கை இலங்கை அரசு தகர்க்க முயற்சிப்பதை தடுக்க, இந்த நாடுகளில் உள்ள புலிகள் நிழல் அமைப்புகளை சேர்ந்தவர்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது; அதனால், சர்வதேச நிதி உதவி அளிக்கக்கூடாது என்று பிரசாரம் செய்தும் வருகின்றனர். புலிகளின் சர்வதேச “நெட்வொர்க்’கை ஒடுக்க இலங் கையின் முயற்சிக்கு உதவினாலும், அது நடத்திய போரில் அப் பாவி மக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரித்து போர் குற்றங்களுக்கு தண்டனை தர வேண்டும் என்பதிலும் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *