டெல்லி: மதுரை அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் புதிய சமுதாய வானெலி அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அனுமதியை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.
கிராமப்புற சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமுதாய வானொலிக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த சமுதாய வானொலி மூலம் உள்ளூர் சமுதாய மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும் முடியும்.
மாணவர்களின் படிப்புக்கும், ஒடுக்கப்பட்ட மக்களும் உள்ளூர் நிர்வாகத்தில் பங்கேற்கலாம், சமுதாய-பொருளாதார பிரச்சனைகளுக்கும் இது கைகொடுக்கும். மேலும், அரசாங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள உதவும்.
இந்நிலையி்ல் ஊரக வளர்ச்சிக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு மதுரைக்கு அருகே இருக்கும் டி.புதுப்பட்டியை சுற்றியுள்ள நான்கு தாலுகாக்களைச் சேர்ந்த 59 கிராம மக்களிடம் சர்வே ஒன்றை எடுத்தது.
இதில் 708 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 83.05 சதவீதம் பேர் தாங்கள் செய்திதாள்களை படிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். அவர்களில் 61 சதவீதம் பேர் தாங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளை சமாளிக்க சமுதாய வானொலி தங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். 66.7 சதவீதம் பேர் எப்.எம் வானொலி கேட்பதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டி.புதுப்பட்டியில் புதிய சமுதாய வானொலி அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இது இன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
Leave a Reply