மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியினர் பிடியில் உள்ள கிராமங்களை மீட்க அப்பகுதிகளுக்குள் போலீஸ் படையும் ராணுவமும் நுழைந்துள்ளது.
எனவே, மாவோயிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள லால்கர் பகுதி விரைவில் மீட்கப்பட்டு சகஜநிலை திரும்பும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் லால்கருக்குள் ராணுவம் வந்தால் நாடு முழுவதும் வன்முறை வெடிக்கும் என மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள மேற்கு மிதுனபுரி மாவட்டம் லார்கர் பகுதியின் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை தங்கள் பிடிக்குள் வைத்துள்ளனர். மூன்று நாட்களுக்களாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதிகளை அவர்கள் விடுவிக்கப்பட்ட பகுதி என அறிவித்தனர்.
மேலும் அங்குள்ள உள்ளுர் மார்க்சிஸ்ட் பிரமுகர்களைச் சுட்டுத்தள்ளுவது, காவல் நிலையங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்குவது என வன்முறையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
இதையடுத்து, மாவோயி்ஸ்டுகளைக் கட்டுப்படுத்தி, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க லால்கர் பகுதிக்கு துணை ராணுவ படை அனுப்பப்பட்டுள்ளது.
துணை ராணுவம் நுழைய முடியாத வகையில் அங்கங்கே கண்ணிவெடிகளையும், மரங்களை வெட்டிபோட்டும் தடைகளை மாவோயிஸ்டுகள் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தத் தடைகளை உடைத்து முன்னேற, சிறப்புப்பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 200 பேர் கொண்ட துணை ராணுவ படை களத்தில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே லால்கர் பகுதியில் பழங்குடியினர் வன்முறையில் இறங்கியதற்கு மாவோயிஸ்டு தலைவர் கிஷான்ஜி மத்திய, மாநில அரசுகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.
Leave a Reply