நெடும்பச்சேரி (கேரளா): காலாவதியான உரிமத்துடன் ஜெட் ஏர்வேசின் ஜெட்லைட் விமானத்தில் பணியாற்றிய துணை விமானி தரையிறக்கப்பட்டார். அவருக்குப் பதில் வேறு ஒரு துணை விமானி வரவழைக்கப்பட்டு பின்னர் விமானம் தொடர்ந்து பறந்தது.
ஹைதராபாத்திலிருந்து கொச்சிக்கு நேற்று ஒரு ஜெட்லைட் விமானம் சென்றது. அந்த விமானத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் அதிகாரியும் பயணம் செய்தார்.
அவருக்கு விமானத்தின் துணை விமானி மீது திடீர் சந்தேகம் எழுந்தது. நெடும்பச்சேரிக்கு விமானம் வந்து சேர்ந்ததும் அவர் துணை பயணியின் உரிமத்தைக் கேட்டார்.
அதை வாங்கிப் பார்த்தபோது அது ஏற்கனவே காலாவதியாகி விட்டது என்பதும் புதுப்பிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து விமானம் திரும்பிச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. வேறு ஒரு துணை விமானி வரவழைக்கப்பட்டார். லைசன்ஸ் இல்லாத துணை விமானி தரையிறக்கப்பட்டார்.
இந்தக் குழப்பம் காரணமாக 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அந்த விமானம் மீண்டும் ஹைதராபாத் கிளம்பிச் சென்றது.
Leave a Reply