வங்கி கணக்குகள் முடக்கம்…பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஸ்தம்பித்தது!

posted in: மற்றவை | 1

24-pyramid-swaminathan200சென்னை: பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சொத்துக்களை மதிப்பிட தற்காலிக மதிப்பீட்டாளரை நீதிமன்றம் நியமித்தது தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை வருமான வரித்துறை, இந்த நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளதால் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் மும்பையைச் சேர்ந்த பட்னி நிதி நிறுவனத்துக்கு ரூ.5 கோடி கடன் தரவேண்டியிருந்தது. ஆனால் இந்தக் கடனை சொன்னபடி தராமல் இழுத்தடித்து பிரமிட் சாய்மீரா.

இதனால் நீதிமன்றத்துக்குப் போன பட்னி நிறுவனம், சென்னை நீதிமன்றத்தில் பிரமிட் சாயம்மீராவுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அதில், தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தும் அளவு பிரமிட் சாய்மீரா நிறுவனம் இல்லை என்றும், இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தை முடக்கி, சொத்துக்களை மதிப்பிட்டு ஏலத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பிரமிட் சாய்மீராவின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய ஒரு தற்காலிக பொறுப்பாளரை நியமித்தது.

இதனை எதிர்த்து பிரமிட் சாய்மீரா எதிர் மனு தாக்கல் செய்தது. இதில், பிரமிட் நிறுவனம் நல்ல நிலையில் இயங்குவதாகவும், நிறுவனத்திடம் போதிய நிதி ஆதாரங்கள் உள்ளதாகவும் சாய்மீரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர்ந்துள்ள பட்னி நிறுவனத்துக்கு 2008 இறுதிவரை வட்டியாகவே ரூ.22.11 லட்சம் செலுத்தியுள்ளதாகவும் கூறியது.

மேலும் இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ. 721 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ள பிரமிட் சாய்மீரா, தற்காலிக பொறுப்பாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரியது.

ஆனால் இதற்கு மறுத்துவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணைக்கான தேதி வரை மதிப்பீட்டாளர் நியமனம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, பிரமிட் சாய்மீராவின் அனைத்து சென்னை வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது. இதனால் பிரமிட் சாய்மீராவின் வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

  1. NagaSoundappan G

    Hi,

    I’m regular vistor to Tamil Desam and I appreciate your work and intiative. I use to visit several Tamil Website but this is something different from other sites.

    I use to read Thirukkural from Speacial pages everyday, memorizing and try impleting those in my Life.

    Today While I reading a kural in “KELVI” Athigaram I found Kural #412 is incomplete.

    I understood this happen because of oversight.

    Please update those and review all other kural also once againwhy because,

    long back I notice in “KALVI” Athigaram I found Kural #398 is mistake. That should be “thanKATRA KAlvi” in first line it printed “Thannarra Kalvi”.

    Please do the needful.

    Thanks for your service in Tamil.
    Thamizh Vazhaga…..

    Regards,
    NagaSoundappan G

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *