அருணாசலப் பிரதேசம் அருகே செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தையும், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 13 பேரின் சடலங்களும் புதன்கிழமை மீட்கப்பட்டன.
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மேற்கு சியாங் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. இந்திய -சீன எல்லையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள மலைப் பகுதி அருகே விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்த பகுதியில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள இயலவில்லை.
இந்த விபத்தில் விமானப் படை அதிகாரிகள் உள்பட 13 பாதுகாப்புப் படையினர் பலியாயினர்.
Leave a Reply