ஸ்வைன் ப்ளூ: வெளிநாட்டு பயணம் தவிருங்கள் – ஆசாத்

posted in: மற்றவை | 0

டெல்லி: அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் ஸ்வைன் ப்ளூ வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இது வரை 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் இந்த நோய் இந்தியாவுக்குள்ளும் பரவி வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கை மத்திய அரசு மக்கள் வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,

ஸ்வைன் ப்ளூ முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய் தான். அமெரிக்கா, மெக்சிகோ, உள்ளிட்ட நாடுகளில் ஸ்வைன் ப்ளூ வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களால் இந்த நோய் இந்தியாவில் பரவி வருகிறது.

இதனால் இந்த நாடுகளுக்கு யாரும் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணங்களை தவிர்க்குமாறு டி.வி. மற்றும் பத்திரிகைகள் வாயிலாகவும் மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது.

மாணவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு சென்ற பின்னர் ஸ்வைன் ப்ளூ குறைந்த பின்னர் அவர்கள் வெளிநாடு செல்லலாம் என்றார் குலாம் நபி ஆசாத்

30 பேருக்கு ஸ்வைன் ப்ளூ…

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் நாசாவுக்கு சென்று வந்த 17 வயது மாணவர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் சென்ற மற்ற 30 மாணவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் மேலும் 7 மாணவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *