புதுடில்லி: பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கித்தவித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண் டுகளில் அந்நாட்டை சேர்ந்த 143 நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கிப் போட்டுள்ளன.
இந்தியாவுடன் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்ட வர்த்தக உறவு, அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியில் பெரிதும் உதவிகரமாக அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனங்களை, இந்திய நிறுவனங்கள் வாங்கியிருப்பதன் மூலம், பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோவது தடுக் கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த பல் வேறு நிறுவனங்களும் தாராளமய பொருளாதாரக் கொள்கையால், கடந்த நான்கு ஆண்டுகளாக பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற் பட்ட போதிலும், இந்திய நிறுவனங்கள் இதனால், பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. மாறாக, தொடர்ந்து கிடைத்து வரும் லாபத்தால், அதிக பண பலத்துடனும், கடந்த காலத்தை விட அதிக முதலீடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவை சேர்ந்த 143 நிறுவனங்களை, இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கி உள்ளன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் முழுவதும் பணமாக கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.இதனால், அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனங்கள், இழுத்து மூடப்படுவதில் இருந்து தப்பியிருப்பதோடு, அந்நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த அமெரிக்கர்களின் வேலையும் பறிபோகாமல் தப்பி உள்ளன.கடந்த 2007-08ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவை சேர்ந்த 94 நிறுவனங்களை வாங்கும் ஒப் பந்தங்களை இந்திய நிறுவனங் கள் ஏற்படுத்தி உள்ளன. இவற் றில் 50 நிறுவனங்கள், பொருளாதார நெருக்கடியால் நலிவுற்று, மூடப்படும் நிலையில் இருந் தவை.இந்திய தொழில் துறை கூட்டமைப்பு, எப்.ஐ.சி.சி.ஐ., மற்றும் எர்னஸ் அண்டு யங் ஆகிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் தெரிவிக் கப்பட்டுள்ளன. டாடா கெமிக்கல்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் ஆகிய, இந்தியாவை சேர்ந்த பலம் வாய்ந்த நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங் களை அதிகளவில் வாங்கி உள்ளன.
தகவல் தொழில்நுட்பம், கம்ப் யூட்டர், உற்பத்தி மற்றும் மருந்து தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனங்கள் தான், இந்திய நிறுவனங் களால் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாகவே, அமெரிக்காவில் இந்திய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகின் றன. இதனால், அமெரிக்க சந்தையில் இந்திய நிறுவனங் களின் வளர்ச்சியும் அதிகரித்து வந்தது. இந்திய நிறுவனங்களால் வாங்கப் பட்ட பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள், முழுவதும் ரொக்கத்துக்கே வாங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்களின் இணைப்புகளாகவே பெரும்பாலான நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வரையறுக்கப்பட்ட தாராளமய கொள் கை காரணமாக இது சாத்தியமாகி உள்ளது. ரிசர்வ் வங்கியிடம் உள்ள புள்ளிவிவரங்களின் படி, 2007-08ம் ஆண்டில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் 75 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 திட்டங்களின் முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கிடைத் துள்ளது. இவற்றில் கூட்டு தொழில் திட்டங்களும், முழுமையான முதலீடு திட்டங்களும் அடங்கும்.
Leave a Reply