30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாட்டில் சினிமா பார்த்த சவுதி அரேபிய மக்கள்

posted in: மற்றவை | 0

saudi-arabia-cinemaபொதுநலத்திற்காக வேலைநிறுத்தம் செய்கையில் திரையரங்குகளை மூடினால் கூட, ‘அட, என்னடா நாடு இது… ஜனநாயகமே செத்துபோச்சே’ என்று புலம்புகிறோம். சந்துக்கு சந்து திரையரங்குகள், வீட்டுக்கு வீடு டிவிடி என பொழுதுபோக்குக்கு நமக்கு பஞ்சம் என்பது வந்ததேயில்லை.

சவுதி அரேபியா அப்படியில்லை. அது பழமையைப் போற்றும் இஸ்லாம் வழி நாடு என்பதால் பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அங்கே அனுமதியில்லை. அட, ஒரு திரையரங்கம்கூட கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சவுதி அரேபியா மக்கள் சினிமா பார்க்க வேண்டுமானால் பக்கத்தில் உள்ள பஹ்ரைன், எகிப்து நாடுகளுக்குத்தான் செல்லவேண்டும். அந்த அளவுக்கு சவுதி அரேபியாவில் கண்டிப்பு, கட்டுப்பாடு.

அந்த கட்டுப்பாடு கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக திரைப்படம் ஒன்று அங்கு திரையிடப்பட்டுள்ளது. அதுவும் சவுதி இளவரசர் அல்வாகீத் பின் தலாலுக்குச் சொந்தமான ரியாத்தில் உள்ள ரொட்டானா திரையரங்கில் இந்தப்படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் ‘

மெனாஹி’. நகைச்சுவை படமான இதில் சவுதி நடிகர் பையஸ் அல் மாலிகியும், சிரியா நடிகை மோனா வாசீப்பும், சவுதி நடிகை ரிமாசும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை 25 ஆயிரம் ஆண்களும், 9 ஆயிரம் பெண்களும் பார்த்துள்ளனர்.

ஆனால் திரைப்படம் வெளியிட்டமைக்கு இஸ்லாமிய பழமைவாதிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் பையஸ் அல் மாலிகிக்கு கடும் மிரட்டல்கள் வந்துக் கொண்டிருக்கின்றனவாம். இஸ்லாம் மதத்துக்கு எதிராக படத்தில் எதுவும் கூறப்படவில்லை என்று விளக்கம் சொல்கிறார் நடிகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *