டெல்லி: அக்னி-3 ஏவுகணைத் திட்ட இயக்குநராக சிறப்பாக செயல்பட்டு வந்த டெஸி தாமஸ், தற்போது அக்னி -5 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் டெஸி தாமஸ். இந்தியாவிலேயே முதல் முறையாக ஏவுகணைத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட பெண் என்ற பெருமையை ஏற்கனவே டெஸி பெற்றுள்ளார்.
அக்னி ஏ2 திட்ட இயக்குநராகவும், அக்னி 3 உதவித் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார்.
மேலும், அக்னி திட்டத்தின் ஆரம்ப காலங்களில் அதன் மூளையாக செயல்பட்டு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அக்னி -5 ஏவுகணைத் திட்ட இயக்குநராக டெஸி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்த அக்னி ஏவுகணையை 5000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாக மாற்றும் திட்டமே அக்னி -5 திட்டமாகும். இந்த மிக முக்கியமான, மிகப் பெரிய திட்டத்தின் இயக்குநராக பெண்மணி ஒருவர் நியமிக்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸி தாமஸ் டிஆர்டிஓ எனப்படும் ஆய்வு மற்றும் வளர்ச்சி கழகத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானி ஆவார். டி.ஆர்.டி.ஓவில் டெஸி உள்பட கிட்டத்தட்ட 200 பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.
Leave a Reply