அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் இளம் குழந்தைகள் இருவர் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.
பிறந்து 7 மாதங்களே ஆன பச்சிளம் பாலகர்களின் தந்தை செல்வின் அரியரத்தினம் திங்கட்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது செல்லக் குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் சடலமாக கிடக்கக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
குழந்தைகளின் தாயாரான றீட்டா மருந்து உட்கொண்ட மயக்கத்தில் நிலத்தில் நினைவிழந்து கிடக்கக் காணப்பட்டார். விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அந்த நவீனமுறையில் அமைந்த வீடு முழுவதிலும் தேடுதல் நடத்தினர்.
அரியரத்தினம் உடனடியாக சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் வண்டியை வரவழைத்து அவர்களது உதவியுடன் குழந்தைகள் இருவரையும் அவசர அவசரமாக பிறின்செஸ் மார்கிறெட் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற போதிலும் உயிரைக்காப்பாற்றும் முயற்சி பயனளிக்காது போய்விட்டது. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.
Leave a Reply