ஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்

posted in: கல்வி | 0

மதுரை : தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலை மூலம் 2009 – 11ம் கல்வி ஆண்டில், தற்போது பணியில் உள்ள 1000 ஆசிரியர்களுக்கு பி.எட்., கற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நுழைவுத் தேர்வு வருகிற அக். 25ம் தேதி நடக்க உள்ளது. தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டுக் கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவியியற்பியல், உயிர் இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உயிர்வேதியியல், பயன்பாட்டு வேதியியல், விலங்கியல், தாவரவியல், தாவர உயிரியல், நுண்ணுயிரியல், சுற்றுச் சூழல் அறிவியல், உயிர் நுட்பவியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி பயன்பாடு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், பொருளாதாரம், வணிகவியல், மனையியல் பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக, மத்திய அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பிரைமரி, நர்சரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்., பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகவும், தற்போதும் பணியில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஆங்கிலம் வாயிலாகவே பாடங்கள் உள்ளன.

பி.எட்., விண்ணப்பங்களை, “தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கல்வி மைய அலுவலகத்தில் 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2′ என்ற முகவரியிலும், மதுரை நகர் கல்வி மைய அலுவலகம், 36, மேலவடம்போக்கித் தெரு, மதுரை-1′ என்ற முகவரியிலும் ரூ. 500 செலுத்தி நேரில் பெறலாம். தபாலில் பெற விரும்புவோர் ரூ. 550 மணியார்டர் மூலம் அனுப்பியும் பெறலாம். மேலும் விபரம் பெற, ஒருங்கிணைப்பாளரை 0452- 652 2013, 233 9974 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *