சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாற்றல்
கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பொது நலச் சங்கத்தின் மாநில மகளிரணி தலைவர் இந்திரா, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக செய்தி வெளியானது. இதற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென இந்திரா கூறியுள்ளார்.
இது குறித்து, சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், 6ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தடை விதிக்கக் கோரி, என் அனுமதி இல்லாமல், எனக்குத் தெரியாமல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்னைப் போல போலி கையெழுத்திட்டு, எனக்குத் தெரியாமல் இது நடந்துள்ளது. இதற்கு காரணமான அந்த நபர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, எனக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பேன். இவ்வாறு இந்திரா கூறினார்.
Leave a Reply