ஆசிரியர்கள், போதிய சாப்பாடு இன்றி தவிக்கும் பெங்களூர் தமிழ் அகதிகள் பள்ளி

posted in: கல்வி | 0

பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கு உடனடியாக 6 ஆசிரியர்களும், வாரம் முழுவதும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 16 கூடுதல் உணவும் தேவைப்படுகிறதாம்.

தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நிலையை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்களின் பேராதரவைப் பெறவும் யோசித்து வருகிறது.

ஆசிரியர்களுக்கும், சாப்பாட்டுக்கும் ஸ்பான்சர்களைப் பெறவும் அது உத்தேசித்துள்ளது.

தற்போது இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றாவது முதல் பத்தாவது வகுப்பு வரை எடுக்க வேண்டியுள்ளது. இங்கு மொத்தம் 210 பேர் படிக்கின்றனர். இது 250 ஆக உயரும நிலை உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமி கோபிநாத் கூருகையில், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஸ்பான்சர் செய்தால் நரமாக இறுக்கும். அது இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.

எங்களுக்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூ்ட்டர் அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய படிப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகிறாரக்ள்.

இங்குள்ள மாணவ, மாணவியர் தாய் மொழியில் (தமிழ்) படிக்க விரும்புகிறார்கள். அது நல்லதுதான். அதேசமயம், ஆங்கில அறிவையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

முழு நேர ஆசிரியர்கள் கிடைத்தால் நலமாக இருக்கும். ஆனால் அவர்களை பிடிப்பதுதான் சிரமமாக உள்ளது. அதேசமயம், பகுதி நேர ஆசிரியர்கள் கிடைத்தாலும் அவர்களையும் வரவேற்கிறோம்.

இதுதவிர பாடங்களைப் படிக்க மாணவர்களுக்கு உதவ தொண்டர்களும் தேவைப்படுகிறார்கள்.

கர்நாடக அரசின் அக்ஷய பாத்திரம் திட்டம் எங்களுக்கு உதவிகரமாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு இதன் மூலம் கிடைத்து விடுகிறது. இருப்பினும் வாரம் முழுவதும் மூன்று வேளை உணவு தர வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வாரத்திற்கு 21 வேளை உணவு தர வேண்டியுள்ளது.

ஆனால் இதில் சிரமம் உள்ளது. ஸ்பான்சர்கள் யாரேனும் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவிக்கு காலை அல்லது இரவு நேர உணவை ஸ்பான்சர் செய்ய முன்வந்தால் பெரும் நிம்மதியாக இருக்கும் என்றார் அவர்.

அதேபோல, பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தேவையான இடம் உள்ளபோதிலும் போதிய கட்டடம் இல்லை. தற்போதுள்ள கட்டடம் மிகவும் பழமையாக உள்ளது. குளியலறைகள், ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வேண்டியுள்ளது. குடிநீர்க் குழாய்கள் பழுது பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வளவு சிக்கல்கள் உள்ளபோதிலும் மின்சாரம் கிடைப்பதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை. அதேபோல பெங்களூர் குடிநீர் வாரியம், எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்வதாக லட்சுமி கோபிநாத் நன்றியுடன் கூறுகிறார்.

இந்தப் பள்ளிக்கு சிஸ்கோ நிறுவனம் கம்ப்யூட்டர்களை தானமாக அளித்துள்ளது. பள்ளிச் சுவர்களுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இலவசமாக பெயின்ட்டிங் செய்து தந்துள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடியாத வருத்தத்தில் உள்ளவர்கள் அந்தத் தமிழ் மக்களின் வாரிசுகளுக்கு உதவ முன்வரலாம்.

அப்படி முன்வர உதவுவோர் லட்சுமி கோபிநாத்தை 9902421091 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *