டெல்லி: ஆல்கஹால் சோதனையில் 29 விமானிகள் மது அருந்திவிட்டு விமானங்களை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சாராய அதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகளே இதில் அதிகமானவர்கள்.
விமானத்தில் ஏறும் முன் அதனை இயக்கும் விமானிகளுக்கு ஆல்கஹால் செய்யப்படுவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 29 பைலட்டுகள் குடித்துவிட்ட விமானம் ஓட்ட வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் 8 பைலட்டுகள் சாராய அதிபரான விஜய் மல்லையா நடத்தும் கிங்பிஷர் நிறுவன விமானங்களில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலா 6 பைலட்டுகளும் இந்த ஆல்கஹால் சோதனையில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஜெட் நிறுவனத்தின் 6 பைலட்டுகள் மற்றும் பாரமவுண்ட் விமானத்தின் 3 பைலட்டுகளும் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர்.
குடித்து விட்டு பணிக்கி வரும் விமானிகள் அடுத்த ஆறு வாரங்களுக்கு விமானமே ஓட்டக்கூடாது என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டும், குடிப்பது தொடர்கிறது.
மாட்டிக் கொண்ட விமானிகள் அனைவரும் 6 வாரகாலம் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.
சீட் பிடிக்க காங்கிரசில் கடும் போட்டி:
இந் நிலையில் திமுக கூட்டணியி்ல் தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அந்த தொகுதிகளில் சீட்டை வாங்க காங்கிரசார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொண்டாமுத்தூரில் 2006ம் ஆண்டில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு தோற்றார். அங்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மு.கண்ணப்பன் இப்போது திமுகவில் இணைந்து மீண்டும் அங்கு போட்டியிட திமுக தலைமையிடம் விருப்ப மனு தந்துள்ளார். ஆனால், அங்கு திமுக போட்டியிட்டால் வேறு தொகுதியை காங்கிரசுக்கு விட்டுத் தர வேண்டி வரும்.
அப்படி ஒரு நிலை வந்தால் கம்பம் தொகுதியை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கேட்பதாகத் தெரிகிறது. அந்தத் தொகுதி கிடைத்தால் தனது ஆதரவாளரான சுந்தரவடிவேலுவை நிறுத்த தங்கபாலு நினைக்கிறார்.
ஆனால், தொண்டாமுததூரே வேண்டும் என்று கருதும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மீண்டும் அங்கு போட்டியிட விரும்புகிறார்.
இந் நிலையில் நிலையில் இந்தத் தொகுதியை தனது ஆதரவாளரான எம்.என்.கந்தசாமிக்குப் பெற்றுத் தர மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் தரப்பு தொண்டாமுத்தூருக்குப் பதில் பர்கூரைக் கேட்கிறதாம். அங்கு தனது ஆதரவாளரை நிறுத்த விரும்புகிறாராம் வாசன்.
Leave a Reply