இதய தசை செயலிழப்பு கவனிப்பு மையம்: ராமச்சந்திரா மருத்துவமனையில் துவக்கம்

posted in: மற்றவை | 0

tbltnsplnews_844398140911சென்னை: இதய தசை செயலிழத் தலை (ஹார்ட் பெயிலியர்) கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று திறக்கப்பட்டது.

ருமேட்டிக் காய்ச்சல், இதய வால்வுகள் பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறுநீரகம் செயலிழப்பு, சர்க் கரை நோய் மற்றும் பிறவியிலேயே நோய்களை கவனிக்காமல் விடுவது போன்ற காரணங்களால் இதய தசை செயலிழப்பு (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுகிறது.

இந்த பாதிப்பினால் சிலருக்கு ஒரே நாளில் மிகுந்த மூச்சுத்திணறல் ஏற்படும். நோய் முற்றிய நிலையில், சோர்வாகவும், நடந்தால் மூச்சுத் திணறலாகவும், சில ஆண்டுகளில் கால் களில் வீக்கமும், வயிற்றில் வீக்கமும் ஏற்படலாம். இதுவே இதய தசை முழுவதுமாக செயலிழந்த நிலை என்று கூறப்படுகிறது.

இந்த பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு தகுந்த ஆலோசனை கள் வழங்கவும் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இதய தசை செயலிழப்பு கவனிப்பு மையம் ஒன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ராமச் சந்திரா பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாசலம், மையத்தை திறந்து வைத் தார். பல்கலைக் கழக இதய வியல் நிபுணர் பேராசிரியர் தணிகாசலத்தின் மகன் மோகன் தணிகாசலம், அமெரிக்க பல்கலைக் கழகத்தின் இதய நிபுணர் கள் வில்லியம் டோபர் ஆப்ரஹாம், பெஞ்சமின்சன் ஆகியோர் இம்மையத்தின் வருகை பேராசிரியர்களாக நியமனம் பெற்றனர். இதற் கான சான்றிதழை பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாச் சலம் வழங்கினார்.

விழாவில், இதயவியல் நிபுணர் டாக்டர் தணிகாசலம் பேசுகையில், இங்கு துவங்கப்பட்டுள்ள “ஹார்ட் பெயிலியர் கிளினிக்’, இதயம் செயலிழப்பதை துரிதமாக கண்டறியவும்; மோசமான நிலையை அடையாமல் இருக்கவும்; இதய தசை பாதிக்கும் மற்ற கோளாறுகளை அறிந்து சிகிச்சை அளிக்கவும் உதவியாக இருக்கும். நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நோயின் தன்மை யையும், உணவுக் கட்டுப் பாட்டு முறைகளை எடுத் துரைக்கும் பணியையும், உடற்பயிற்சி, மன அமைதி உண்டாக்கும் பணிகளை யும் இம்மையம் மேற் கொள்ளும்,’ என்றார்.

விழாவில் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட அமெரிக்க பல்கலைக் கழகத்தின், இதய நிபுணர்கள் வில்லியம் டோபர் ஆப்ரஹாம், பெஞ்சமின் சன் ஆகியோர் கூறுகையில்,அமெரிக்காவில் இந்த நோய் தற்போது பாதியாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை குறைக்க இதுபோன்ற கவனிப்பு மையம் மிகவும் அவசியம்’ என்றனர். விழாவில், ராமச்சந்திரா பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாசலம், துணைவேந்தர் ரங்கசாமி, டீன் சோமசுந்தரம், இதயவியல் துறை டாக்டர்கள் ரிச்சர்டு, மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற உள்ள ஒரு கருத்தரங்கில், இதய நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க டாக்டர்களும் இக்கருத்தரங்கில் பேசுகின்றனர். இதய தசை செயலிழப்பு அறிகுறி உள்ளவர்கள், டெலிபோன் மூலமும், இன்டர்நெட் மூலமும் டாக்டர்களின் ஆலோசனைகளை பெறலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *