மிலன்/டெல்லி: இத்தாலியின் பிரபலமான பியாஜியோ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்புப் பிரிவை இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ஆசியாவில் வலுவா காலூன்றும் வகையில் முதலில் இந்தியாவில் தனது மோட்டார் சைக்கிள் ரகங்களை அறிமுகப்படுத்தவுள்ளது பியாஜியா.
பிரபலமான வெஸ்பா ஸ்கூட்டர்களை தயாரிக்கும் நிறுவனம்தான் பியாஜியோ. மோட்டார் சைக்கிள்களைத் தொடர்ந்து டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்களையும் தயாரித்து இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க அது திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலேயே எங்களது மோட்டார் சைக்கிள்களை தயாரித்து விற்பனையில் விட திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் கிடைக்கும் மனித வளம், சிறப்பான தொழில் சூழல், மார்க்கெட்டிங் சாத்தியங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இதேபோல புதிய 1000 மற்றும் 1200 சிசி டீசல் மற்றும் டர்போ டீசல் என்ஜின்களையும் இந்தியாவில் தயாரிக்கவுள்ளோம் என்று பியாஜியோ தெரிவித்துள்ளது.
Leave a Reply