அணு, உயிரி மற்றும் ரசாயன ஆயுத தாக்குதல்களை உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கும் அதிநவீன வாகனத்தை இந்தியா தயாரித்துள்ளது.
வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய ராணுவமும் அதிநவீனமாக்கப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகள், அதிநவீன கருவிகள், இலகு ரக போர் விமானங்கள் போன்றவை இப்போது உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்படுகிறது. இதில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் முக்கிய பங்காற்றுகிறது.
உலகளவிலான ராணுவம் இப்போது அணு ஆயுதம், உயிரி மற்றும் ரசாயன ஆயுத தாக்குதல் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, நாட்டின் மீது இதுபோன்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை உடனடியாக கண்டுபிடித்து ராணுவத்துக்கு தெரிவிக்கும் அதிநவீன வாகனத்தை ராணுவ ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ளது.
“பி.எம்.பி. -2 கே” என்று அழைக்கப்படும் இந்த வாகனத்தில், இந்த ஆயுதங்களை கண்டுபிடிக்கும் உணர்வு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ராணுவ மையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த வாகனம் நிறுத்தப்படும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக கண்டறிந்து, ராணுவ மையத்துக்கு தெரிவித்து உஷார்படுத்தும்.
ஆந்திராவில் மேடாக்கில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் புனேயில் உள்ள பி.இ.எல். தொழிற்சாலையிலும் இந்த வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
Leave a Reply