புதுடில்லி : பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.4 ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியும் கூட இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜூலை மாதத்தில் ரூ.2,880 கோடி வருமான இழப்பு ஏற்படும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித் திருக்கிறார்.
ஏனென்றால், உற்பத்தி விலையை விட சில்லரை விற்பனை விலை குறைவாக இருப்பதால் தான் என்றார் அவர். பெட்ரோலிய பொருட்களில் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது தொடர்பாக ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட பிரச்னைக்கு பதிலளித்த முரளி தியோரா, ஜூலை 2 ம் தேதி பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட பின் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ஜூலை மாதம் ஏற்பட இருந்த வருமான இழப்பு ரூ.4,870 கோடியில் இருந்து ரூ.2,880 கோடியாக குறைகிறது என்றார். விலையை கூட்டிய பின்னும்கூட, ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்கும்போதும் ரூ.1.01 ம், டீசல் விற்பனை யின் போது ரூ.0.02 ம் நஷ்டம் ஏற்படுகிறது என்றார் தியோரா.
Leave a Reply