மெல்பர்ன் : வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தலைமையில் நேற்று முன்தினம் உயர் மட்டக்கூட்டம் நடந்தது.
வெளிநாட்டு மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. துணை பிரதமரும், கல்வித்துறை அமைச்சருமான ஜூலியாவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வெளிநாட்டு மாணவர்களின் நலன் மற்றும் இருப்பிட பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும், என கெவின்ருத் உறுதியளித்தார்.
வெளிநாட்டு மாணவர்களின் நலனில் ஆஸ்திரேலியா அதிக அக்கறை கொண்டுள்ளது, என்பதை தெரிவிப்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு, வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. “வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கும் சர்வதேச மாணவர்கள் மாநாட்டில், மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைவது குறித்து விவாதிக்கப்படும்’ என கெவின்ருத், இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
Leave a Reply