இனி ஐ.டி.ஐயில் சேர 8ம் வகுப்பு போதும்!

posted in: கல்வி | 0

சென்னை: இனி 8ம் வகுப்பை முடித்துவிட்டாலே ஐடிஐகளில் சேரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்த அந்தத் துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில்,

வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, விரைவில் அதை நிர்ணயம் செய்யும். அவர்களது தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) பயிலும், 16,000 மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

புதிதாக பிரிக்கப்பட்ட அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் திறக்கப்படும்.

கடந்த 2008ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, இந்த ஆண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் காத்திருப்போர் அரசின் உதவித் தொகையைப் பெற, அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 24,000த்தைத் தாண்டக் கூடாது என்று தற்போது விதி உள்ளது. இந்த நிபந்தனை ரூ. 50,000 என உயர்த்தப்படும். இதனால் கூடுதலான இளைஞர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும்.

அரசு ஐடிஐகளில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு என்ற நிலை உள்ளது. இது 8ம் வகுப்பாக குறைக்கப்படும். இதன்மூலம் 8ம் வகுப்பை முடித்துவிட்டாலே ஐடிஐகளில் சேரலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *