சென்னை: மகாராஷ்டிரா மற்றும் டில்லிக்கு
அடுத்தபடியாக தமிழகத்தில் இன்டர் நெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ளன. ஆந்திராவுக்கு அடுத்த படியாக இன்ஜினியரிங் கல்லூரிகள் தமிழகத்தில் அதிகம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இந்த மாநிலத்தில் அதிகம் என்பதால் மாணவர்கள் அதிக அளவில் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
மாணவர்கள் மட்டுமல்ல குடும்ப தலைவிகள், வயதானோர் போன்றவர்களும் வெளிநாட் டில் உள்ள தங்கள் பிள்ளைகளுடன் இன்டர்நெட் மூலம் தொடர்பு கொண்டு உரையாடுவது அதிகரித் துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 14 லட்சம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்தி வந்ததாக பார்லிமென்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில், 29 லட்சம் பேரும், டில்லியில், 15 லட்சத்து 76 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் 11 லட்சம் பேரும் ஆந்திராவில் ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் பேரும் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். “தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்களும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் கம்ப்யூட்டர் மயமாக்கப் பட்டு தகவல் தொழில் நுட்ப முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்த வயதான மக்களும் தற்போது இதை பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனர்’ என தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் தேவிதார் தெரிவித்துள்ளார்.
Leave a Reply