தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்குள்ள கல்லூரிகளில் கல்வி வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்படும் என்று பேரவையில் நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுத் துறை மானியக் கோரிக்கைக்கு அவர் பதிலளித்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கல்லூரியில் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தனியார் கல்லூரிகளிலாவது அவர்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன், “இடம் கிடைக்காதவர்கள், அது குறித்து அரசுக்குத் தெரிவித்தால் அவர்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்படும்” என்றார்.
Leave a Reply