எதிர்பாராத லாபம்; மகிழ்ச்சியில் இந்திய கார்ப்பரேட் துறை!

20-bse1200மும்பை: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவரத் துவங்கிவிட்டன. இதுவரை 118 நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

அவை பெரும்பாலும் இந்திய கார்ப்பரேட் துறைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் உள்ளது. ஒரு பக்கம், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, விலைகள் உயர்வு, அரசின் தடுமாற்றங்கள் தொடர்ந்தாலும் இந்தக் காலாண்டு முடிவுகள் பெரும் ஆறுதல் தருவதாக உள்ளன. இந்த நிறுவனங்களின் நிகர லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இருந்ததை விட ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமான நிகர லாபத்தை இந்த நிறுவனங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் நிறுவனங்களின் நிகர செலவும் குறைக்கப்பட்டுள்ளதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

லார்ஸன் அண்ட் டூப்ரோ, பஜாஜ் ஆட்டோ, இன்போஸிஸ், டிசிஎஸ், க்ராம்ப்டன் கிரீவ்ஸ், கிர்லோஸ்கர் போன்றவற்றின் லாப விளிம்பு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக லார்சன் அண்ட் டூப்ரோவின் இந்த காலாண்டு லாபம் அசாதாரணமானது. ரூ.1076 கோடியை லாபமாகப் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

விஎஸ்டி, ஜேகே டயர், இஎன்போடெக், ஆர்கனோஸிஸ் போன்றவை 100 சதவிகித லாபம் ஈட்டியுள்ளன. மோட்டார் வாகனத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டிருந்தாலும், பஜாஜ் ஆட்டோ 67 சதவிகித கூடுதல் லாபத்தை இந்த காலாண்டில் பெற்றுள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளது.

ரூபாயின் மதிப்பு 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருப்பது சாப்ட்வேர் தொடர்பான நிற