இந்தியா 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கு அனுப்பி உள்ளது என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார்.
மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது:
ஐ.நா.சபையின் அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியுள்ள நாடுகளின் பங்களிப்பு வரிசையில் இந்தியா மூன்றாவது நாடாக விளங்குகிறது.
ஜூன், 2009 நிலவரப்படி அமைதிப்படையில் பணியாற்றிய இந்திய வீரர்களில் 131 பேர் இறந்துள்ளனர்.
அமைதிப்படையில் பணியாற்றும்போது இறந்த மற்றும் ஊனமுற்ற வீரர்களுக்கு ஐ.நா.சபை இழப்பீடு வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply