வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு, அதிபர் ஒபாமாவை விட மக்களின் ஆதரவு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த இவருக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ஆதரவு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் குறிப்பிட்ட 17 மாநில கவர்னர்களின் செயல்பாடு குறித்து கணிக்கப் பட்டதில், பாபி ஜிண்டால் மூன்றாவது இடத்தில் உள்ளார். லூசியானாவை பொறுத்தவரை 55 சதவீத மக்கள், ஜிண்டாலின் செயல்பாட்டை ஆதரிக்கின்றனர். ஒபாமாவை விட 11 புள்ளிகள் கூடுதல் ஆதரவு பெற்றுள்ளார் ஜிண்டால்.அமெரிக்காவில் 2012ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜிண்டால் போட்டியிடவும் 27 சதவீத மக்கள் இப்போதே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Leave a Reply