மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதும் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2-ம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-
மத்திய அரசு பதவி ஏற்றதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தி உள்ளது. இது ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுத்த மக்களுக்கு தந்த பரிசு.
அரசின் 100 நாள் செயல் திட்டத்தில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை முதல் சாதனையாக சொல்லாம். ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு மத்திய அரசு செலுத்திய நன்றிக் கடன் இது. இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வை முன் கூட்டியே வெளியிட்டதால் டெல்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பலர் பெட்ரோலை கூடுதல் விலைக்கு விற்பதற்காக “ஸ்டாக் இல்லை” என்று மூடிவிட்டார்கள்.
வாகன ஓட்டிகளும், பழைய விலைக்கு பெட்ரோல் போட்டு நிரப்பி விடலாம் என்று பெட்ரோல் பங்க்குகளுக்கு படை எடுத்தனர். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
Leave a Reply