தேனி : கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு பல்வேறு உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதில் முன்னுரிமை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
அது போல கலப்பு திருமணம் செய்பவர்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு ஓராண்டுக்குள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என, மின்வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வரை உள்ளவர்களுக்கு இலவச மோட்டார் இணைப்பு வழங்கவும், ஆண்டு வருமானம் 12 ஆயிரம் ரூபாயாகவும், 200 சதுர அடிக்குள் வீடு இருப்பவர்களுக்கு இலவச வீட்டு மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழக அரசின் இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ், நிலம் வழங்கப்பட்டவர்களுக்கு இலவச மின்மோட்டார் இணைப்பு வழங்கும் பணியை விரைவு படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
priyatharshinivenkitesh
kalapu thiruman ilavasa veetu nilan – reg
131, m.g.r.nagar, madhukkarai main road, coimbatore
priyatharshinivenkitesh
kalapu thirumana ilavasa 2 ekkar nilam valangum thittam