கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக ‘காட்டிக் கொடுக்கும்’ கருணா தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் இருந்து வந்த 500 போராளிகளும் தப்பி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிபிசியின் சிங்கள சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கில் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்ட பின்னர் கிழக்கு பிராந்திய தளபதியான ராம் தலைமையில் 500 போராளிகள் யாலா காட்டுப் பகுதிக்குள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அவர்களை சரணடையுமாறு ராணுவம் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் சரணடையவில்லை.
இந்த நிலையில், அவர்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் ராணுவம் இறங்கியது.
ஆனால் தற்போது ராம் உள்ளிட்டோர் மலேசியாவுக்குத் தப்பிப் போய் விட்டதாக கருணா கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணா கூறுகையில், அம்பாறை காட்டுப் பகுதியிலிருந்து ராம், தயா மோகன், நகுலன் உள்ளிட்டோர் மலேசியாவுக்குத் தப்பிப் போய் விட்டனர்.
அவர்களுடன் இருந்து வந்த 500 போராளிகளும் கூட தப்பிப் போய் விட்டனர் என்றார் கருணா.
Leave a Reply