சென்னை: சென்னை பெருநகர குடிநீர்
விநியோகம் மற்றும் கழிவு நீரகரற்று வாரியம் சென்னை நகரில் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ. 183.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா ஸ்டீலின் துணை நிறுவனமான ஜாம்ஷெட்பூர் யுடிலிட்டிஸ் மற்றும் சேவை நிறுவனம் (ஜஸ்கோ) பெற்றுள்ளது.
குடிநீர் மற்றும் கழிவு நீர் கசிவுகளைக் கண்டறியும் பணியை ஜஸ்கோ மேற்கொள்ளும். இந்தப் பணியை 18 மாதங்களில் ஜஸ்கோ நிறுவனம் முடிக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கான செலவுகளில் 35 சதவீதத்தை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை தரும். 15 சதவீதத்தை தமிழக அரசு வழங்கும். 50 சதவீத நிதியை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வழங்கும்.
Leave a Reply