இந்திய கடற்படையில் அணுசக்தி மூலம் இயங்கும் முதல் நீர்மூழ்கி கப்பலை இணைக்கும் விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார்.
‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ எனப் பெயரிட்டுள்ள இந்த கப்பல் 104 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டது. இதில் 80 மெகாவாட் அணு உலை உள்ளது. இதை கல்பாக்கம் அணுமின் நிலையம் வடிவமைத்தது.
இந்த கப்பலை உருவாக்க ரூ.14 ஆயிரம் கோடி செலவாகி உள்ளது. அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் உலகில் 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி, ஆந்திர முதல்வர் ராஜசேரரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply