உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
‘ஒப்பரேட்டிங் சிஸ்டம்’ மென் பொருள் ஜாம்பவான்களான ‘மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்’ நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ‘நெட் புக்’ கணினி வகைகளுக்குக் கூகுள் ‘க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்’ பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண்டு இந்த புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ‘வின்டோஸ் 7’ எனப்படும் புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்தத் தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் பல ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ கள், இணையம் பிரபல்யம் அடைவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டவை எனவும், தமது ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ இணையத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
வைரஸ் உள்ளிட்ட கணினிகள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனம் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஏற்கனவே ‘ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தவுள்ள கூகுள் ‘க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்’ ‘லாப்டப்’ மற்றும் ‘டெஸ்க்ட்டாப்’ கணினிகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply