உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி என்ற இடத்தில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்தேர்வில் கலந்துகொண்ட இருவர் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.
இன்று அதிகாலையில் இருந்தே போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் மைதானத்தின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். அந்த மைதானத்தின் கேட் மூடப்பட்டிருந்தது.
தேர்வு தொடங்கியபோது மைதானத்தின் கதவு திறக்கப்பட்டது. உடனே வெளியே திரண்டிருந்த இளைஞர்கள் முண்டியடித்தபடி உள்ளே புகுந்தனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் நிலைமை மிகவும் மோசமடைந்தது. மிரண்ட இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்து ஓடியதால் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள்.
5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசாரின் இந்த செயலால் தேர்வுக்கு வந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். மைதானத்தின் முன்பு ஜி.டி. ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அதன் அருகே உள்ள ரெயில் நிலையத்துக்கு தீவைத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
Leave a Reply