பீகார் மாநிலம் முன்னாபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய்ரவுத். ரெயில்வே துறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சுதேவி. இவர்களுடைய மகன் விகாஸ்ரவுத். சஞ்சய் ரவுத் கடந்த மாதம் 25-ந்தேதி மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது மஞ்சு தேவியே அவரை ஆள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
மகன் விகாஸ்ரவுத் நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தார். தந்தை இறந்து விட்டால் கருணை அடிப்படையில் ரெயில்வே துறையில் அந்த வேலை மகனுக்கு வழங்கப்படும் எனவே அந்த வேலையை மகனுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று மஞ்சுதேவி விரும்பினார். இதற்காக கணவரையே கொன்று விட முடிவு செய்தார். இதற்கு மகனும் சம்மதம் தெரிவித்தார்.
இதற்காக விகாஷ்யாதவ் என்ற கூலிப்படை தலைவனிடம் ரூ.1 லட்சம் கொடுத்து கணவரை கொன்று விடும்படி கூறினார்.
அவர் ராமன்யாத், லால்லுயாதவ் ஆகிய 2 பேரை அனுப்பி வைத்தார். அவர்கள் சஞ்சய் ரவுத்தை சுட்டுக்கொன்றனர்.
போலீசார் மஞ்சுதேவி, ராமன்யாத், லால்லுயாதவ் ஆகியோரை கைது செய்தனர். கூலிப்படை தலைவன் விகாஷ் யாதவை தேடி வருகின்றனர்.
Leave a Reply