டோக்கியோ :ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த நாற்காலி முன்னால் செல்ல வேண்டும், வலது புறம் திரும்ப வேண்டும் என மனதில் நினைத்தால் போதும், அப்படியே நாற்காலி நகரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?நம்பித் தான் ஆகவேண்டும்;
படிங்க மேலே… ஒருவர் தனது கை கால்களை அசைக்காமல், மனதில் நினைத்தாலே நகரும் வகையிலான சக்கர நாற்காலியை ஜப்பான் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, டொயாட்டோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகித்து அதற்கேற்ப இந்த சக்கர நாற்காலி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என டொயாட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டொயாட்டோ மோட்டார் நிறுவனம் கூறியதாவது: மின்னணு தொழிலநுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த சிறப்பு சக்கர நாற்காலிக்கு தானியங்கி சக்தி உண்டு. அதில், அமர்ந்திருப்பவரின் மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகித்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள தொப்பி ஒன்றை அவர் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகிக்கும் தொப்பியிடம் கிடைக்கும் மின் ஆற்றல் மூலம் சக்கர நாற்காலி இயங்கும். சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர், கை கால்களை அசைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு போக வேண்டும் எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்று நினைத்தாலே போதும்; சக்கர நாற்காலி தானாக நகரும் என்றனர்.
Leave a Reply