மறு கூட்டலில் முதலிடம்: மாணவருக்கு அரசு பரிசு உறுதி

posted in: கல்வி | 0

tblarasiyalnews_7456171513சென்னை: “”மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்க அரசு ஆவன செய்யும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், சி.ஞானசேகரன்(காங்கிரஸ்) பேசியதாவது:


ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து 1,184 மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வந்துள்ளார். ஏற்கனவே, 1,183 மதிப்பெண் பெற்றவரை முதல் மாணவராக அறிவித்து அரசு சார்பில் பரிசு, ஊக்கத்தொகை, லேப்-டாப் வழங்கப்பட்டுவிட்டது.

தற்போது, அதைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாக பெற்றுள்ள பாலமுருகனுக்கும் பரிசு, ஊக்கத்தொகை, லேப்-டாப் மற்றும் மேல்படிப்பு வாய்ப்புகளை வழங்க வேண்டும். சட்டசபை நடக்கும்போது அமைச்சர் அறிவிக்க வேண்டிய அறிவிப்பை தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அந்த மாணவருக்கு, “ரேங்க்’ கொடுக்க முடியாது என அவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் விவரம்: அந்த மாணவர் மறுகூட்டல் மூலம் மதிப்பெண் பெற்றுள்ளாரா, மறுமதிப்பீட்டின் மூலம் மதிப் பெண் பெற்றுள்ளாரா என்பதைப் பார்க்க வேண் டும். எது எப்படி இருந்தாலும் அந்த மாணவர், 1,184 மதிப்பெண்கள் எடுத்திருப்பதால், அரசின் லேப்-டாப், பரிசு, ஊக்கத்தொகை அனைத்தும் அந்த மாணவருக்கு வழங்க வேண்டும் என முதல்வரிடம் எடுத்துச் சொல்லி, அவருக்கும் நிச்சயமாக வழங்க அரசு ஆவன செய்யும். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *