சென்னை: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடின்றி நிலக்கரி பெற இரு நிலக்கரி நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
கொல்கத்தா கிழக்கு பிராந்திய நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு 1,425 மில்லியன் டன் நிலக்கரி வாங்க தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அதேபோல் மகாநதி நிலக்கரி நிறுவனத்துடன் ஆண்டுக்கு 11,875 மில்லியன் டன் நிலக்கரி வாங்க இன்னொரு ஒப்பந்தத்தையும் தமிழகம் செய்து கொண்டுள்ளது.
இதன் மூலம் வருடத்திற்கு 13.3 மில்லியன் டன் இந்திய நிலக்கரி தமிழ்நாடு மின்வாரிய அனல் மின்நிலையங்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதம் தேவைப்படும் 1.8 மில்லியன் டன் நிலக்கரியை மத்திய மின் அமைச்சக அனுமதியோடு தமிழ்நாடு மின்வாரியம் இறக்குமதி செய்யும்.
தமிழக அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு 15.90 மில்லியன் டன் நிலக்கரி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மின்வாரிய அனல் மின் நிலையங்கள் எந்தவித நிலக்கரி தட்டுப்பாடும் இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Leave a Reply