சியோல்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் வட கொரியா 3 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.
இன்று அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இன்று 3 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது வட கொரியா.
சில நாட்களுக்கு முன்புதான் 2 ஏவுகணைகளை அது ஏவி கோபத்தை ஏற்படுத்தியது.
இன்று ஏவப்பட்ட ஏவுகணைகள் 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியவை.
ஏவுகணை சோதனையை தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் இரண்டு ஏவுகணைகள் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கும், எட்டரை மணிக்கும் ஏவப்பட்டன. 3வது ஏவுகணை காலை 10.45 மணிக்கு ஏவப்பட்டது.
ஜப்பான் கடலோரம் உள்ள கிழக்குத் துறைமுகமான உன்சன் பகுதியிலிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிகிறது.
Leave a Reply