மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்கு கூட் டணி தலைவர் சோனியா நேற்று திறந்து வைத்தார்.
மும்பை அடுத்த மாகீம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வந்தன. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, கடல் வழியாக பாலம் அமைப்பது என, 1990ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, 2004ம் ஆண்டு பாந்த்ரா முதல் ஒர்லி வரையுள்ள 5.6 கி.மீ., தூரத்துக்கு கடல் வழிப்பாலம் அமைக்கும் பணிகளை இந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து அஜித் குலாப்சந்த் என்ற நிறுவனம் துவங்கி நடத்தியது. இப்பாலப் பணிகள் சமீபத்தில் முடிந்தன. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், ஐ.மு., கூட்டணி தலைவர் சோனியா, புதிய பாலத்தை திறந்து வைத்தார். புதிய பாலம் போக்குவரத்துக்கு திறந்து வைக் கப்பட்டுள்ளதன் மூலம், மும்பை நகரின் தெற்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு வழக்கமாக ஆகும் 60 முதல் 90 நிமிடங்கள் என்பது, 6 முதல் 7 நிமிடங்களாக குறைந் துள்ளது. எட்டு வழிப்பாதையாக அமைக்கப்பட் டுள்ள இப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதன் மூலம், ஆண்டு ஒன் றுக்கு 200 கோடி ரூபாய் வரை எரிபொருள் சேமிக் கப்படும். இதற்கிடையே, புதிய பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்த விதிக் கப்படும் வரிக்கு எதிராக, மும்பை ஐகோர்ட்டில், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Leave a Reply