மேலும் 3 அமைச்சர்கள் இன்ஜினியரிங் கல்லூரி துவக்கினர்

posted in: கல்வி | 0

tblgeneralnews_15118044615சென்னை : இந்த ஆண்டு மேலும் மூன்று தமிழக அமைச்சர்கள், புதிதாக பொறியியல் கல்லூரி துவக்குகின்றனர். தமிழகத்தில் கடந்தாண்டு 76 தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டன.


இந்த ஆண்டு தமிழகத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகளை துவங்க, 144 பேர், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 பேர், பெண்கள் மட்டும் படிக்கும் பொறியியல் கல்லூரிகள் துவங்க விண்ணப்பித்திருந்தனர்.

பொதுவாக புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு நான்கு பிரிவுகள் துவக்க அனுமதி வழங்கப்படும். பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் முதலாண்டில் ஐந்து பிரிவுகள் துவக்க அனுமதி வழங்கப்படுகிறது. புதிதாக பொறியியல் கல்லூரி துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியுடன், அண்ணா பல்கலைக் கழகங்களின் இணைப்பு பெற்று விண்ணப்பிக்க வேண்டும். நேற்று மாலை வரை 24 பேர், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி மற்றும் அண்ணா பல்கலைக் கழகங்களின் அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த 24 புது பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளது. இக்கல்லூரிகளில் தலா 240 இடங்கள் வீதம் 5,760 இடங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கவுள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்றுள்ள மேலும் பல கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகங்களில் இணைப்பு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே சில தமிழக அமைச்சர்கள் குடும்பத்தினரால், தனியார் பொறியியல் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மேலும் மூன்று தமிழக அமைச்சர்களின் குடும்பத்தாரால் துவக்கப்பட்ட அறக்கட்டளை சார்பில், புது பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. சேலம், திருச்சி, கடலூர் ஆகிய இடங்களில் தமிழக அமைச்சர்கள் சார்பில் இக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

புது கல்லூரிகள் விவரம்:

1. அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

2. அல்-அமீன் பொறியியல் கல்லூரி, ஈரோடு

3. அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தஞ்சாவூர்

*4. கேர் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், திருச்சி

5. ஈரோடு பில்டர்ஸ் எஜூகேஷனல் டிரஸ்ட் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஈரோடு

6. இமயம் பொறியியல் கல்லூரி, திருச்சி

7. ஜெய் ஸ்ரீராம் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பூர்

8. ஜான்சன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை

9. கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, கோவை

10. நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சேலம்

*11. எம்.ஆர்.கே., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கடலூர்

12. மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, சிவகங்கை

13. அன்னை தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, புதுக்கோட்டை

14. பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

15. பாவை தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்

16. ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பெரம்பலூர்

17. எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லூரி, கோவை

18. சிவானி பொறியியல் கல்லூரி, திருச்சி

19. எஸ்.ஆர்.ஜி., பொறியியல் கல்லூரி, நாமக்கல்

20. ஸ்ரீகுரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை

21. யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை

22. வி.கே.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கரூர்

*23. வி.எஸ்.ஏ., எஜூகேஷனல் அண்டு சேரிட்டபிள் டிரஸ்ட் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், சேலம்

24. வாண்டையார் பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *