லெபனான் நாட்டைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்பதியினர் 13 பாம்புகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்தப் பாம்புகள் தம்பதியினரின் படுக்கை அறை முதல் சகல இடங்களிலும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. அவர்களுடைய உடலெங்கும் ஊர்ந்து செல்கின்றன. அவர்களும் அதை ரசித்து மகிழ்கின்றனர்.
இலங்கைக்குச் சுற்றுலா சென்றபோது முதல்முதலாக மலைப்பாம்பு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள் இவர்கள். அதன் பிறகு பாம்பு பைத்தியம் பிடித்து ஏதோ நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளை வளர்ப்பது போல் பாம்புகளை வீட்டிற்குள்ளேயே வளர்த்து வருகிறார்கள்.
”யாருக்கு வேண்டும் குழந்தைகள்? எங்களுக்கு இவைதான் குழந்தைகள்” என்கிறார்கள்.
இப்படியும் மனிதர்கள்!
Leave a Reply