புதுடில்லி:அரசு பணியில் தொ டர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் ஓய்வூதியம் பெற முடியும் என, மத்திய நிர்வாகத் தீர்பாயம் தெரிவித்துள்ளது.டில்லி அரசு போக்கு வரத்துக் கழகத்தில் 1982ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டு வரை கண்டக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் முகேஷ்.
விருப்ப ஓய்வு பெற்றதும் இவருக்கு சேர வேண் டிய சேமநல நிதி மற்றும் அரசு பணி கொடை ஆகியவை வழங்கப்பட்டு விட்டன. ஆனால், இவர் ஓய்வூதியம் கேட்டார். இதற்கு நிர்வாகம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து முகேஷ், மத்திய நிர்வாக தீர்பாயத்தில் புகார் செய்தார்.
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் துணை தலைவர் ராமச்சந்திரன் இந்த மனுவை விசாரித்தார்.அரசு பணியில் உள்ளவர்கள், 20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் ஓய்வூதியம் வழங்க முடியும். முகேஷ் 10 ஆண்டுகள் தான் பணியில் இருந்துள்ளார். அவருக்கு கிடைக்க வேண்டிய பி.எப்., மற் றும் கிராஜுட்டி போன் றவை வழங்கப்பட் டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கு முகேஷுக்கு தகுதியில்லை. எனவே, ஓய்வூதியம் வழங்க முடியாது என, அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply