புதுடில்லி : இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் அம்பானி சகோததர்களிடையே நடந்து வரும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கிடையே உள்ள சண்டையில் மத்திய அரசு எதுவும் செய்வதற்கும் இல்லை.
எனினும் இயற்கை எரிவாயுவை பயண்படுத்துவதில் சட்டமீறல்கள் எதுவும் நடக்காதவாறு மத்திய அரசு கண்டிப்பாக கண்காணிக்கும் என்றார் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா. அனில் அம்பானி மற்றும் அவரது சகோததர் முகேஷ் அம்பானி ஆகியோருக்கிடையே கிருஷ்ணா – கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி -டி6 ) கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதில் சண்டை நடந்து வருகிறது. அது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று இது குறித்து பார்லிமென்டில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்து பேசிய முரளி தியோரா, இரண்டு தனி நபர்கள் அல்லது இரண்டு தனியார் நிறுவனங்களுக்கிடையே நடந்து வரும் சண்டையில் மத்திய அரசு எதுவும் செய்வதற்கு இல்லை. மேலும் இதில் சட்ட மீறல்கள் எதுவும் இருக்கிறதா அல்லது சட்டப்படிதான நடக்கிறதா என்பதை மட்டுமே மத்திய அரசு கண்காணிக்கும் என்றார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் மற்றும் பொதுமக்களின் நலம் கண்டிப்பாக காக்கப்படும் என்றும் சொன்னார்.
முன்னதாக, பார்லிமென்ட்டில் பிரச்னையை கிளப்பிய சமஜ்வாடி கட்சி தலைவர் முலாயாம் சிங், உத்தரபிரதேசத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் அமைத்து வரும் தாட்ரி மின் நிலையத்திற்கு தேவையான எரிவாயுவை, முகேஷ் அம்பானியின் நிறுவனம் கொடுக்காமல் புரக்கணிக்கிறது என்றார். எனவே மற்ற மின்நிலையங்களுக்கு எப்படி எரிவாயு சப்ளை செய்யப்படுகிறதோ அதேபோலவே தாட்ரி மின்நிலையத்திற்கும் சப்ளை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய முரளி தியோரா, தாட்ரியில் அமைக்கப்பட்டு வரும் மின்நிலைய வேலைகள் இன்னும் முழுமை அடையவும் இல்லை. அங்கு மின் உற்பத்தி துவங்கவும் இல்லை. எனினும் உற்பத்தி துவங்கியதும் மற்ற மின்நிலையங்களைப்போலவேதான