இஸ்லாமாபாத் : கடந்த 1990ம் ஆண்டு, பாகிஸ்தானின் அணுஆயுத கூடங்கள் தாக்கப்பட்டால், இந்தியாவின் அணுஆயுத வசதிகளை தாக்க, தயாராக இருக்குமாறு, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனசிர் பூட்டோ, விமானப் படைக்கு உத்தரவிட்டிருந்தார். இத்தகவலை, அந்நாட்டு ராணுவ முன்னாள் தலைமை ஜெனரல் மிர்சா அஸ்லம் பெக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து “டிவி’ சேனல் ஒன்றுக்கு அஸ்லம் பெக் அளித்த பேட்டி: கடந்த 1990ம் ஆண்டு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவை பாகிஸ்தானின் ஆணுஆயுத கூட வசதிகளை தாக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனசிர் பூட்டோ, விமானப் படையை தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார்.
பூட்டோ மீண்டும் பதவிக்கு வருவதை தடுப்பதற்காக, 1988ம் ஆண்டு, “இஸ்லாமி ஜம்கூரி இட்டிகாத்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை வளர்க்க சவுதியில் இருந்து, மறைந்த அரசியல்வாதியான மகமூத் ஹரூனுக்கு அதிகளவில் பணம் கொடுத்தனர். தேர்தல் பிரசாரத்திற்கும் பண உதவி செய்யப்பட்டது. 1990ல், பாகிஸ்தானுக்கு எதிரான சதித்திட்டம் குறித்து பல தகவல்கள் வந்த போதும், பெனசிர் அஞ்சாமல் தைரியமாக இருந்தார். இவ்வாறு அஸ்லம் பெக் கூறினார்.
Leave a Reply