புதுடில்லி : ஜெர்மனியின் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யு., இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.இந்த கார்களை அறிமுகப்படுத்துவதோ இந்த ஆண்டில் விற்பனையை 3000 யூனிட்டுகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் செட் -4 கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை 50 லட்சத்தில் 60 லட்சம் ரூபாயாக இருக்கும் என தெரிகிறது. பி.எம்.டபிள்யு., இந்தியா நிறுவனம் 7 சீரிஸ் பெட்ரோல் காரை செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்துகிறது. கடந்த ஆண்டு 2,908 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 3000 யூனிட்டுகள் விற்பனை செய்யப்படும் என . பி.எம்.டபிள்யு., இந்தியா நிறுவன கிரான்ஸ்னாபில் தெரிவித்துள்ளார்.தற்போது சென்னையில் பி.எம்.டபிள்யு., 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் கார்களை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பிளான்ட்டில் சராசரியாக ஆண்டுக்கு 3000 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அளவை 2011ம் ஆண்டுக்குள் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
Leave a Reply