புதுடில்லி : பெருகி வரும் மின்சார தேவையை சமாளிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், ஈரானில் காஸ் சார்ந்த மின்சக்தி உற்பத்தி பிளாண்டை அமைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
4000 மெகாவாட் திறன் கொண்ட பிளாண்டை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மின்துறை செயலர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்தார். மேலும் ஈரானில் இயற்கை எரிவாயு வளம் அபிரிமதியாக இருப்பதாகவும், ஈரானுடன் இந்தியாவுக்கு நல்ல நட்புறவு இருப்பதாலும் அங்கிருந்து மின்சாரம் பெறுவது சுலபம் என்றார். இதற்காக பவர் ஸ்டேஷனை தேசிய அனல் மின் கார்ப்., ( என்.டி.பி.சி.,) அமைக்கும் என்றும், ட்ரான்ஸ்மிஷன் நெட்ஒர்க்கை பவர் க்ரிட் கார்ப் நிறுவும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் 20,000 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறினார். அக்டோபர் இறுதிக்குள் திட்டத்தின் இறுதி வடிவம் மாதிரி தயாரிக்கப்பட்டு ஈரான் அரசின் ஒப்புதலுக்கு அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply