சென்னை: தமிழக அரசின் அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டின்படி வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, இனம் கண்டறிய நடத்தப் பட்டு வரும் சிறப்பு முகாமில், எட்டாம் வகுப்பு முதல், எம்.பில்., – பி.டி.எஸ்., படித்தோர் என, ஏராளமானோர் நேரில் வந்து தங்களை பதிந்து கொண்டனர்.
சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது, ஊனமுற்றோர், தொழில் நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் வேலைவாய்ப் புக்கு பதிந்துள்ளோரில், அருந்ததியினர்(எஸ்.சி.ஏ.,) தங்களை இனங்கண்டு பதிந்து கொள்ள வசதியாக சிறப்பு முகாம், கிண்டி அரசினர் ஐ.டி.ஐ.,(ஆடவர்) வளாகத்தில் நடந்து வருகிறது.
இந்த முகாமில், அருந்ததியர், சக்கிலியர், மதாரி, மடிகா, பகடை, தோட்டி, ஆதி ஆந்திரா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 3 சதவீத உள்ஒதுக்கீட்டுக் காக, தங்களது கல்வித் தகுதியைப் பதிந்து கொள்ளலாம். ஜாதிச் சான்றிதழ், வேலைவாய்ப் பக பதிவு அட்டை மற்றும் விண் ணப்பத்தோடு முகாமிற்கு வர வேண்டும்.
இந்தப் பிரிவின் கீழ், பதிந்து கொள்ள வந்தோர் கூறியதாவது:டாக்டர் சரஸ்வதி, அண்ணா நகர்: கடந்த 2004ல் பல் மருத்துவப் படிப்பு முடித்து, 2005ல் வேலைக்காக பதிந்தேன். தற் போது, அருந்ததியினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் பதிய வந்துள்ளேன். இந்த சமூகத்தினர் முன்னேற இந்த வாய்ப்பை, படித்த அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாந்தி, புளியந்தோப்பு: நான் எட்டாவது வரை படித்துள் ளேன். 2008ல் என் வேலைவாய்ப்புக்காக, சாந்தோமில் பதிந்து வைத்தேன். இந்த உள் ஒதுக்கீட்டின்படி எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
செந்தில்குமார், வளசரவாக்கம்: கடந்த 2000ல் எம்.காம்., முடித்து, 2006ல் பி.எட்., மற்றும் எம்.பில்., முடித்து, வேலைவாய்ப்புக்காக பதிந்துள்ளேன். ஆதிதிராவிடர் பிரிவிலும் குறிப் பிட்ட சிலர் மட்டுமே வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் 2.87 சதவீதம் உள்ள இந்த சமூகத்திற்காக, 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கடைக்கோடியில் இருக்கும் எங்களுக்கும் குறிப்பிட்ட சதவீதம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கிருஷ்ணம் ராஜு, ராயபுரம்: கடந்த 1992ல் பி.எல்.எம்., படித்து விட்டு வேலைவாய்ப்புக் காக காத்திருக்கிறேன். 3 சதவீத உள்ஒதுக்கீட்டோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந் துள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைக் கும் என்பது வரவேற்கத்தக்கது.
தனசேகர், புளியந்தோப்பு: நான் ஒன்பதாவது வரை படித் துள்ளேன். 1991ல் வேலைவாய்ப் புக்காக பதிந்து வைத்தேன். தற்போது, அருந்ததியினர் இனம் காண நடக்கும் இந்த சிறப்பு முகாமில் பதிய வந்துள்ளேன். காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். பல மாதங்களாக சரியான வேலையின்றி சிரமப்படுகிறேன். இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலை கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.
பிரபாகரன்(36), எட்டாம் வகுப்பு: கடந்த 1990ல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந் தேன்; தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறேன். வேலை கிடைக்கும் என 20 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டு வேலைவாய்ப்பில் எனக்கு வேலை கிடைக்குமென நம்புகிறேன்.
முனிவரதன்(40), எட்டாம் வகுப்பு: கடந்த 1987ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தேன்; தொடர்ந்து புதுப் பித்தும் வருகிறேன். அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் எனக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். 22 ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருக்கிறேன்.இவ்வாறு சிறப்பு முகாமில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
Leave a Reply